ஜனாதிபதி வேட்பாளரும் தற்போதைய ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்கவின் பிரச்சாரக் கூட்டம் வவுனியாவில் இடம்பெற்று வரும் நிலையில் அவருக்கு ஆதரவு தெரிவித்து இரு பெரும் பேரணிகள் ஆயிரக்கணக்கான மக்களோடு இடம்பெற்று இருந்தது.
குருமண்காட்டில் இருந்து இராஜாங்க அமைச்சர் கே. கே. மஸ்தானின் ஆதரவாளர்கள் பேரணியாக ஜனாதிபதியின் பிரச்சாரக் கூட்டம் இடம்பெற்ற வைரவளியங்குளம் மைதானத்தை சென்றடைந்திருந்தனர்.
இதேவேளை வவுனியா குடியிருப்பு சித்தி விநாயகர் ஆலய பகுதியில் இருந்து வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கு. திலீபனின் ஆதரவாளர்கள் பிரசாரக் கூட்டம் இடம்பெறும் வைரவபுளியங்குளம் மைதானத்தை பேரணியாக வந்தடைந்தனர்.
இரு பேரணியிலும் சுமார் 5000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருந்ததோடு வீதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டிருந்த அமையும் குறிப்பிடத்தக்கது.