பயணியை தகாத வார்த்தைகளால் ஏசிய பேருந்து நடத்துனர்; சமூக ஆர்வலர்கள் விசனம்

0
62

கொழும்பு – தெஹிவளை பகுதியில் வேகமாக சென்ற பேருந்தை மெதுவாக செல்லும்படி கூறிய பயணியொருவரை நடத்துநர் தாக்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் நேற்று (31) இடம்பெற்றுள்ளது. தெஹிவளையில் இருந்து வெளிநாட்டுச் சேவையில் ஈடுபடும் பேருந்தில் பணிபுரிந்த நடத்துநரே பயணியை தாக்கியுள்ளார்.

வீதி இலக்கம் 163 தெஹிவளை – வெளிநாட்டுச் வேலை வாய்ப்பு பேருந்தில் பயணித்த நடத்துனரே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளார்.

அதோடு நடத்துனர் பயணியிடம் கடுமையான வார்த்தைகளால் திட்டுவதும் கையடக்க தொலைபேசியில் வீடியோவாக பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் தாக்குதலை நடத்திய சம்பந்தப்பட்ட நடத்துனரை தலங்கம பொலிஸார் கைது செய்தனர்.