டெலிகிராம் நிறுவனத்தின் இணை நிறுவனர் பாவெல் துரோவ் பாரிஸ் அருகே உள்ள விமான நிலையத்தில் பிரான்ஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
செயலியின் மூலம் நடக்கும் சட்டவிரோத செயல்களுக்கு டெலிகிராம் துணை போகிறது, பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிக்கிறது, பயனர்களின் தரவுகளை அரசாங்கத்திடமிருந்து பாதுக்கிறது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் பாவெல் கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்போது, பாவெல் துரோவை நீதிமன்ற காவலில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையே, பாவெல் துரோவின் கைது நடவடிக்கை அரசியல் ரீதியானது இல்லை என பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்தார்.
மேலும், இந்த கைது நடவடிக்கைக்கு எலான் மஸ்க் உள்ளிட்ட பெரும் புள்ளிகள் கண்டனம் தெரிவித்திருந்தனர். அதேபோல ரஷ்யாவும், துரோவ் கைதுக்கு கண்டனம் தெரிவித்து, அவரை மீட்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது.
இவ்வாறான நிலையில், பிரான்ஸில் இருந்து ரபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்யும் திட்டத்தை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துரோவ் கைது எதிரொலியால் இந்த ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக யு.ஏ.இ. அறிவித்துள்ளது.