பொதுத் தொகுதி பொதுவேட்பாளர் என கூறிக்கொண்டு ரணிலுக்கும் ஆதரவு: தமிழ்த் தலைமைகளின் தேர்தல் பித்தலாட்டம் என்கிறார் ஐயாத்துரை

0
85

உறுதியான நிலைப்பாடும் ஒருமித்த கருத்தும் இல்லாத தலைமையால் தமிழ் மக்களுக்கு சரியான அரசியல் வழிநடத்தலை காண்பிக்க முடியுமா? என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் கேள்வியெழுப்பியுள்ளார்

யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார். மேலும் ஜனாதிபதி தேர்தலில் சந்தர்ப்பவாதிகளாக கட்டமைப்பை உருவாக்குவதாக கூறியவர்களில் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவை வெளியிட்டுள்ளனர்.

இது அரசியல் இலக்கற்ற சந்தர்ப்பவாத செயற்பாடு என ஏற்கனவே நாம் தெளிவுபடுத்தியிருந்தோம். அது இப்போது நடைமுறையில் அரங்கேறி வருகின்றது இவ்வாறான செயற்பாடுகளை தமிழ் மக்கள் உன்னிப்பாக அவதானித்துக் கொள்ள வேண்டும்.

பொதுக்கட்டமைப்பு என கூறிக்கொண்டவர்களில் ரெலோ அமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவை வெளியிட்டுள்ளார். இது தேர்தல் பித்தலாட்டமாகவே காணமுடிகின்றது என ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் மேலும் தொிவித்தார்.