கிளப் வசந்த படுகொலை: மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கைது

0
87

க்ளப் வசந்த என்றழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் கொலையுடன் தொடர்புடைய இரண்டாவது துப்பாக்கிதாரி மற்றும் மகிழுந்து சாரதிக்குத் தங்குமிடத்தை வழங்கிய குற்றச்சாட்டில் மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த கைது நடவடிக்கை இன்று (29) காலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கிளப் வசந்த என்ற சுரேந்திர வசந்த பெரேராவின் கொலையுடன் தொடர்புடைய இரண்டாவது துப்பாக்கிதாரியும், கார் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (28) பாணந்துறை (Panadura)  காவல்துறையின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளினால் சந்தேகநபர்கள் பின்வத்த பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் ஒருவரென அடையாளம் காணப்பட்ட காலி (Galle) – நாகொட மற்றும் அஹுங்கல்ல பிரதேசத்தில் வசிக்கும் 29 மற்றும் 32 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக அத்துருகிரிய (Athurikiriya) காவல்துறையிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை 08 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.