அனுரவின் தேர்தல் பிரசார அலுவலகம் தீக்கிரை!

0
75

மீரிகம பொகலகம பிரதேசத்தில் உள்ள தேசிய மக்கள் கட்சியின் தேர்தல் பிரசார அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக பல்லேவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பிரசார அலுவலகத்தில் நேற்று (28) இருந்த மேசைகள், கதிரைகள் மற்றும் விளம்பரப் பலகைகளுக்கு சிலர் தீ வைத்து எரித்துள்ளமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தீ வைத்த நபர் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.