மிளகாய் பொடி தூவி 70 வயது மூதாட்டி வன்கொடுமை: கேரளாவில் பயங்கரம்

0
84

இந்தியாவின் (india) கேரள (kerala) மாநிலத்தில் தனிமையில் வசித்து வந்த 70 வயது மூதாட்டி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார்.

வீட்டில் கொள்ளையடிக்க வந்த சந்தேக நபர் மூதாட்டியின் முகத்தில் மிளகாய் பொடி தூவி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதோடு வீட்டிலிருந்த 7 பவுண் தங்க நகை மற்றும் மூதாட்டியின் தொலைபேசியையும் எடுத்துச் சென்றுள்ளார்.

குறித்த சம்பவம் கேரளாவின் ஆலப்புழை மாவட்டத்தில் காயங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. கனகக்குன்னு பகுதியைச் சேர்ந்த 29 வயதான தனேஷ் என்ற இளைஞர் சந்தேகத்தின் பேரில் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். 

அவரது தொலைபேசியை சந்தேக நபர் எடுத்துச் சென்றதால் மூதாட்டியால் மற்றவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. அக்கம்பக்கத்தினர் அவரைக் கண்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தகவல் தெரிவித்தனர். மூதாட்டி தனியாக தங்கியிருப்பதை அறிந்த பிறகு, சதி திட்டம் தீட்டி குற்றத்தை செய்துள்ளார்” என்றார் காவல்துறை அதிகாரி ஒருவர். சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.