தேர்தலுக்கு நாட்டுக்கு வராதீர்கள்…; வெளிநாடு வாழ் இலங்கையர் மீது சீறிய ராஜித!

0
87

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பலப்படுத்துவதற்காக கட்சிதாவிய ராஜித சேனாரத்ன, வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களை மீண்டுமொருமுறை தேர்தலுக்காக  வாக்களிக்க  நாட்டுக்கு  “வர வேண்டாம்” என சீறியுள்ளார்.

கடந்தமுறை வந்து இருக்க ஒரு நாடு வேண்டும் என கோட்டாவுக்கு வாக்களித்து நாட்டை அழித்தது போன்று ஊழலை ஒழிக்க அனுரவுக்கு வாக்களிக்க வர வேண்டாம் என ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

உலக வரலாற்றில் ஒன்றரை ஆண்டுகளில் வங்குரோத்து நிலையில் இருந்து மீண்ட முதல் நாடு இலங்கை. இதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு மிகப்பெரிய சாதனை பதக்கம் கொடுக்க வேண்டி உள்ளது.

கடந்த முறை தேசிய பாதுகாப்பு பற்றி ஒருவருக்கு வழங்கப்பட்டது. என்ன இருந்தாலும் நாடு வேண்டும் என்று சொல்லி வந்தோரால் நாடு முடிந்தது, நாடு அழிந்தது. இப்போது தேர்தல் நெருங்கும்போது வெளிநாட்டில் இருந்து நம்மவர்கள் வரலாம்.

அவர்கள் வந்து எங்களுக்கு முடிவுகளை வழங்குகிறார்கள், எங்களுக்கு ஆலோசனை வழங்குகிறார்கள். போகும்போது நெடுஞ்சாலைகளில் உள்ள கேஸ் டேங்க், மண்ணெண்ணெய், சாப்பாடு பாக்கெட்டுகளுக்குப் போய் இரவு நேரங்களில் வீடுகளில் செய்தி பார்த்துவிட்டு, விஸ்கி குடித்துவிட்டு, இரவில் கும்மாளம் அடித்துக் கொண்டிருப்பார்கள் என்றார்.

கடந்த முறை போல கட்டுநாயக்காவுக்கு இம்முறையும் வரிசையில் வர வேண்டாம்.  நாங்களாக டிக்கட் போட்டு வந்துள்ளோம். கோட்டாவுக்கு வாக்களிக்க வந்துள்ளோம் எதுவாக இருந்தாலும் இருக்க ஒரு நாடு வேண்டும் என்றீர்கள்.

இம்முறை இரவில்தான் வருவீர்கள். எதுவாக இருந்தாலும் இந்த நாட்டில் ஊழல் ஒழிய வேண்டும். தோழர் அநுரவுக்கு வாக்களிக்கத்தான் இந்த டிக்கட் எடுத்து வந்தோம் என்பீர்கள்.

இம்முறை நீங்கள் அனைவரும் வந்து சென்ற முறை போல் வேலையை விட்டு எங்களிடம் விட்டு விடுங்கள். அப்போது நாம் அனுபவிக்கலாம். நீங்கள் வெளிநாடு போய் உண்டு, குடித்து மகிழலாம் என காட்டமாக கூறினார்.

எனவே வெளிநாட்டு வாழ் இலங்கைப் பெருமக்களே, இங்கு குடியேறுங்கள். இங்கு குடியேறி அந்த சோகத்தை எதிர்கொள்ளுங்கள். அவ்வளவுதான். நீங்கள் எங்களுடன் வரிசையில் நில்லுங்கள். இங்கிருந்து அங்கே திரும்பிப் போகாதீர்கள் என்றும் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

அதேவேளை கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபாயவுக்கு வாக்களிக்க, பெருமளவு வெளிநாட்டு வாழ் தென்னிலங்கையர்கள் நாட்டிற்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.