ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் அறிவிப்பு

0
37

இலங்கையில் வரும் செப்டெம்பர் 21 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறாவுள்ள நிலையில் வேட்பாளர்கள் மும்மரமாக பிரச்சாரத்தில் ஈருபட்டு வருகின்றனர்.

அந்தவகையில் “இயலும் இலங்கை” என்ற தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் வியாழக்கிழமை(29) வெளியிடப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து விடுவித்து பொருளாதார சுபீட்சத்திற்கு இட்டுச் செல்வதற்கான அடிப்படை நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், படிப்படியாக நாட்டை அபிவிருத்தியடைந்த நிலைக்கு கொண்டு செல்லும் திட்டங்களும் “புலுவன் இலங்கை” கொள்கை அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை மக்கள் அனைவருக்கும் நல்லதொரு நாட்டைக் கட்டியெழுப்புவது “இயலும் இலங்கை” என்ற கொள்கைப் பிரகடனத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று என அரச சிரேஸ்ட பேசாளர் ஒருவர் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வரலாற்றில் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட இலங்கை படிப்படியாக மீண்டு வந்ததன் பின்னர் மற்றுமொரு அடியை முன்னெடுத்துச் செல்வது தொடர்பில் ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளதாகவும் கொழும்பு தகவல்கள் கூறுகின்றன.