வாள் வெட்டில் முடிந்த அரசியல் உரையாடல்; அனுர உறுப்பினர் மருத்துவமனையில்

0
67

அனுரவின் கட்சி உறுப்பினர் ஒருவரை வாளால் தாக்கியதாக கூறப்படும் SJB ஆதரவாளர் ஒருவரை மினுவாங்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த நபர் 88-89 பயங்கரவாத காலகட்டம் பற்றி பேசிய விவாதம் உச்சமடைந்த போது கைகலப்பாகி அது மோதலாகியது.

சம்பவத்தில் தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர் வாள் வெட்டுக் காயங்களுடன் மினுவாங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர்கள் இருவரும் அண்டை வீட்டார் என்பதால் அரசியல் உரையாடல் மோதலாக மாறியுள்ளது. இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மினுவாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.