மீண்டும் ஒரு வரிசை யுகத்துக்கு தயாராகுங்கள்: எச்சரிக்கை விடுக்கும் ரணில்

0
38

பொதுமக்கள் சஜித் அல்லது அனுரவிற்கு பதவியை வழங்குவார்களாயின் எதிர்வரும் ஆண்டில் பெப்ரவரி மாதமாகும் போது மீண்டும் ஒர வரிசை யுகத்துக்கு தயாராக வேண்டி வரும் என ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவர்கள் தெரிவிப்பது போல் ஐஎம்எப் ஒப்பந்தத்தை மாற்றியமைத்தால் அந்த நிலை தான் ஏற்படும் என ரணில் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பு டாஜ் சமுத்ரா ஹோட்டலில் இடம்பெற்ற சட்ட வல்லுநர்கள் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி வேட்பாளர் ரணில் இவ்வாறு தெரிவித்தார்.

”பொருளாதார ஸ்திரத்தன்மைக்காக சட்டத்தரணிகள்” என்ற தொனிப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த சந்திப்பில் சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணிகள், ஜனாதிபதி சட்டத்தரணிகள், சிரேஷ்ட சட்டத்தரணிகள் உள்ளிட்ட சட்டத்தரணிகள் சமூகத்தை பிரநிதித்துவப்படுத்தி ஏராளமானோர் கலந்துக் கொண்டிருந்தனர்.

மேலும் கருத்து தெரிவித்த ரணில்,

போர் என்பது ஜனாதிபதி யார் என்பது தொடர்பில் அல்ல பொது மக்களை வாழ வைப்பது தொடர்பிலேயே. இம்முறை வாக்களிக்க வேண்டியது சிலிண்டரை தேடிச் சென்ற யுகத்திலிருந்து வெளியேறவே. நல்லாட்சி காலத்தில் திருடர்களை பிடிக்கும் பொறுப்பை ஏற்ற ஜேவிபி தோல்வியுற்றது.

“எலிகளைப் பிடிக்க, பற்களுடன் ஒரு பூனை இருக்க வேண்டும்: பூனைக்கு பற்கள் இல்லை என்றால், அதைத் திட்டுவதில் அர்த்தமில்லை. என்னுடன் சிறந்த அணி உள்ளது. தம்முடன் இருக்கும் குழுவிற்கு சவால் விடும் குழு வேறு எந்த கட்சியிலும் இல்லை என வலியுறுத்தியுள்ளார்.