பெண் மருத்துவர் கொலை; கலவர பூமியான கொல்கத்தா

0
42

இந்தியாவின் கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு மாணவ அமைப்புகள் செவ்வாய்க்கிழமை (27) தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஹவுரா பாலத்தின் முனை மற்றும் சந்திரகாச்சி ரயில் நிலையம் அருகில் போராட்டக்காரர்களை கலைக்க நீர் தாரை பிரயோகம் மேற்கொண்டதோடு கண்ணீர்புகை குண்டுகளையும் வீசி பொலிஸார் தடியடி நடத்தினர்.

தலைமைச் செயலகம் நோக்கி இன்று நடைபெறும் பேரணியில் மேற்கு வங்காள பயிற்சி வைத்தியர்கள் சங்கம் பங்கேற்கவில்லை. எனினும் கொல்கத்தாவில் புதன்கிழமை (28) மிகப்பெரிய பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ளது.

ஷியாம்பஜாரில் தொடங்கி தர்மதலா வரை பேரணி நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, புதிதாக உருவாக்கப்பட்ட பாசிம் பங்கா சத்ர சமாஜ் என்ற மாணவர் அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் கொல்கத்தா கல்லூரி சதுக்கத்தில் இருந்து தலைமைச் செயலகத்தை நோக்கி பேரணியாக சென்று கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் அவர்களை தடுத்து நிறுத்தும் முயற்சியாக, கொல்கத்தா பொலிஸார் தடுப்புகள் அமைத்துள்ளனர். தலைமைச் செயலகம் நோக்கி ஆர்ப்பாட்ட பேரணி தொடங்குவதற்கு முன்னதாக மாணவர் அமைப்புகளைச் சேர்ந்த முக்கியமான 4 மாணவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்துள்ளதாகவும் இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.