அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 5ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதில் ஜனநாயக் கட்சி வேட்பாளராக துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸூம் குடியரசுக் கட்சி வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் போட்டியிடுகின்றனர்.
இரு ஜனாதிபதி வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் களமிறங்கியுள்ளதுடன் இருதரப்பினருக்கும் பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் டொனால்ட் ட்ரம்புக்கு முழு ஆதரவளித்து வருகிறது. அதுமட்டுமின்றி தான் ஜனாதிபதியானால் எலான் மஸ்க்குக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என ட்ரம்பும் அண்மையில் தெரிவித்தார்.
இந்நிலையில் கமலா ஹாரிஸ் ஜனாதிபதியாக தெரிவானால் அமெரிக்காவுக்கு பேரழிவு ஏற்படும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானால் அமெரிக்காவையும் ஜனநாயகத்தையும் காப்பாற்றுவார். கமலா ஹாரிஸ் தெரிவானால் அமெரிக்கா பேரழிவை சந்திக்க நேரிடும். எனது வார்த்தைகளை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.