முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌசிக்கு 10 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கி கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அனர்த்த முகாமைத்துவ அமைச்சுக்கு சொந்தமான வாகனத்தை முறைகேடாக பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து அருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு 400,000 ரூபா அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.