100 கோடி வசூலித்த தங்கலான்: இந்தியில் வெளியிடத் திட்டம்

0
73

தங்கலான் படம் உலகம் முழுவதும் 100 கோடி ரூபாய் வசூல் செய்ததாக தகவல். கடந்த 15ஆம் திகதி இப் படம் வெளியாகியிருந்தது. பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம்,பார்வதி உள்ளிட்டோர் நடித்துள்ள இப் படம் கடந்த 2 ஆண்டுகளாக பெரும் பொருட்செலவில் தயாராகியிருந்தது.

எவ்வாறாயினும் இப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில் தற்போது 100 கோடி வசூல் சாதனைப் பெற்றுள்ளது. தெலுங்கில் இப்படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் எதிர்வரும் 30ஆம் திகதி ஹிந்தியிலும் இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தில் நடித்த நடிகர்களை அனைவரும் பாராட்டி வருவதுடன் பின்னணி இசைக்கும் அதிக வரவேற்பு கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.