த கோட் திரைப்படத்தில் விசேட பாடல் வெளியீடு: ஸ்பெஷல் பாடலில் திரிஷா விஜய் என தகவல்

0
64

நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்). ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து இருக்கும் தி கோட் படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், மீனாட்சி சௌத்ரி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தி கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று திரைப்படம் வரும் செப்ரெம்பர் 5 ஆம் திகதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில், இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

திரைப்படம் வெளியாக இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. இதுக் குறித்து வெங்கட் பிரபு சுவாரசியமான அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கோட் படத்தின் ஸ்பெஷல் பாடல் இன்னும் சில நாட்களில் வெளியிடப் போவதாகவும். அப்பாடலில் நடிகை திரிஷா மற்றும் விஜய் இணைந்து ஆடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கின்றனர்.