மேகா ஆகாஷிற்கு காதல் திருமணம்; மாப்பிள்ளை யார் தெரியுமா?: கல்யாண பத்திரிக்கையுடன் ரஜினிக்கு வீட்டுக்கு வந்த ஜோடி

0
41

பேட்ட படத்தில் நடித்து தமிழுக்கு அறிமுகமான நடிகை மேகா ஆகாஷ் நடிகர் ரஜினிக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்துள்ளார். இரு தினங்களுக்கு முதல் தனது இன்ஸ்டாகிராமில் நீண்ட நாள் காதலருடன் நிச்சயம் நடந்ததாக தனது புகைப்படம் வெளியிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்து இருந்தார்.

அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளதால், பத்திரிக்கை கொடுக்கும் வேலை மும்முரமாக உள்ளார். நடிகை மேகா ஆகாஷின் காதலர் சாய் விஷ்ணு, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய, மாநில அமைச்சருமான திருநாவுக்கரசரின் மகன் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

மேகா ஆகாஷ் மற்றும் சாய் விஷ்ணு இயக்கிய குறும்படத்தில் நடித்த போது, இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இதைத்தொடர்ந்து இருவரும் ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், பெற்றோரிடம் காதலை சொல்லி காதலுக்கு சம்மதம் வாங்கி உள்ளனர்.

இவர்களின் திருமணம் அடுத்த மாதம் செப்டம்பர் 15ந் திகதி நடைபெற உள்ளது. இந்த திருமணத்திற்காக திருநாவுக்கரசர் மும்முரமாக பத்திரிக்கை கொடுத்து வரும் நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை கொடுத்துள்ளார்.

இந்த சந்திப்பில் மேகா ஆகாஷ், சாய் விஷ்ணு, திருநாவுக்கரசர் மற்றும் பல குடும்ப உறுப்பினர்கள் உடன் இருந்தனர். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.