இளைஞர் வயிற்றிலிருந்து கத்தி, மண்வெட்டி, சாவி: அறுவை சிகிச்சையில் நீக்கம்

0
132

இந்தியா, பீகார் மாநிலம் கிழக்கு சாம்பாரண் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

அவரது குடும்பத்தினர் அவரை அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மருத்துவர்கள் இளைஞரின் வயிற்றை எக்ஸ் ரே எடுத்துப் பார்த்ததில், உலோகப் பொருட்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.

உடனே மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து வயிற்றிலிருந்து சாவி வளையம், சிறிய கத்தி, இரண்டு நகவெட்டிகள் உள்ளிட்டவற்றை அகற்றியுள்ளனர்.

இது தொடர்பில் இளைஞரிடம் விசாரிக்கையில், அண்மைக் காலமாக அவர் உலோக பொருட்களை விழுங்கியது தெரிய வந்துள்ளது. அறுவை சிகிச்சையின் பின்னர் இளைஞர் நலமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இளைஞருக்கு மன நலப் பிரச்சினை இருப்பதால் அதற்கு மருந்து சாப்பிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.