மௌனரகம் படத்திற்கும் ரீமேக் படத்திற்கும் எவ்வளவு வித்தியாசங்கள் உள்ளது என வீடியோக்களையே இணைத்து பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.
குறிப்பாக தற்போது பகிர்ந்து வரும் வீடியோவில் மௌனராகம் படத்தின் ஃப்ளாஷ் பேக் காட்சி எடிட் செய்யப்பட்டுள்ளது. அதாவது ஃப்ளாஷ் பேக் காட்சியில், நடிகர் கார்த்தி பொலிஸ் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்படுவார். அப்போது அவரிடம் மன்னிப்பு கேட்க ரேவதி காத்துக்கொண்டு இருப்பார்.
மேலும், கார்த்திக்கை பொலிஸார் தாக்கி இருப்பதைப் போலவும் காட்சி இருக்கும். கார்த்திக்கிடம் ரேவதி மன்னிப்பு கேட்டதும், கார்த்திக் ரேவதியைப் பார்த்து லேசாக கண்களைச் சிமிட்டிவிட்டு சிரித்துக் கொண்டு மிகவும் ஜாலியாகச் செல்வார்.
இந்தக் காட்சியை ரீமேக் படங்களில் கலாய்க்கும் அளவிற்கு எடுத்து வைத்துள்ளனர். ஒரு படத்திலே ரேவதி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கதாநாயகி சிரிப்பதைப் போல காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.
அதற்கு கார்த்திக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கதாநாயகனோ சிரித்துக்கொண்டு போகும் காட்சியெல்லாம் பார்க்க சகிக்கல. அதேபோல் கன்னடத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் நடிகர் சிவ ராஜ்குமார் நடித்துள்ளார்.
இந்த காட்சிகளும் பாராட்டும்படியாக இல்லை. இதனைப் இணையத்தில் பகிர்ந்துள்ள ரசிகர் ஒருவர், “மெளன ராகத்தை மற்ற மொழியில் எப்படி சிதைச்சு இருக்கானுங்க என பாருங்க மக்களே…!!!” என கேப்ஷனும் இட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகின்றது.