இலங்கையில் 9 ஆவது ஜனாதிபர்தி தேர்தல் வரும் செப்ரெம்பர் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இம்முறை ஜனாதிபதி தேர்தலில் 36 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். வேட்பாளர்கள் தற்போது மக்களை ஈர்க்கும் வகையில் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்தவகையில் இன்றையதினம் ஐக்கியதேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் திருகோணமலை – கந்தளாய் பிரச்சார கூட்டத்தில் மருத்துவர் அருச்சுனா கலந்து கொண்டுள்ளார்.
அதேவேளை முன்னதாக சஜித் கட்சியின் பிரச்சாரத்துக்கு பொறுப்பான பெண்ணிடம் மருத்துவர் அருச்சுனா பேசிய தகவல்கள் வெளியாகியிருந்தது. அதோடு இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு மருத்துவர் அருச்சுனா ஆதரவு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது அதனை ஊர்ஜிதப்படுத்தும் வகையில் மருத்துவர் அருச்சுனா சஜித்தின் பிரச்சாரத்தில் கலந்து கொண்டுள்ள காணொளி வெளியாகியுள்ளது.