கிளிநொச்சியில் இடம்பெற்ற தோழர் 30 நிகழ்வில் தமிழ் மக்கள் கூட்டணியின் மாவட்ட அமைப்பாளரும் ஓய்வுபெற்ற அதிபருமான ஆறுமுகம் ஆளாழசுந்தரம் EPDPயுடன் இணைந்துள்ளார். குறித்த நிகழ்வு கிளிநொச்சியில் உள்ள தனியார் விருத்தக மண்டபத்தில் இடம் பெற்றது.
1994 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்துக்கு தெரிவான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் 30 வருட தொடர்ச்சியான சேவையை பாராட்டும் வகையில் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
முன்ளாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் வை. தவநாதன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
குறித்த நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவுக்கு கௌரவிப்பு இடம்பெற்றதுடன், வாழ்த்துரைகளும் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் தமிழ் மக்கள் கூட்டணியின் மாவட்ட அமைப்பாளரும் ஓய்வுபெற்ற அதிபருமான ஆறுமுகம் ஆளாழசுந்தரம் EPDPயுடன் இணைந்துள்ளார்.
அவரை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மாலை அணிவித்து கௌரவப்படுத்தினார். எதிர்வரும் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை வெற்றிபெற வைத்து, தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்யவுள்ளதாக அவர் தெரிவித்து அக்கட்சியில் இணைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.