உலகின் இரண்டாவது பெரிய வைரம்: போட்ஸ்வானாவில் கண்டுபிடிப்பு

0
50

உலகின் இரண்டாவது பொிய வைரம் போட்ஸ்வானாவில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கனேடிய நிறுவனமான லுகாரா டயமன்ட் நிறுவனத்திற்குச் சொந்தமான சுரங்கத்தில் இந்த வைரம் கண்டுபிடிக்கப்பட்டது.

1905 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட 3,106 காரட் கல்லினன் வைரத்திற்குப் பிறகு இது மிகப்பெரிய கண்டுபிடிப்பாகும்.

போட்ஸ்வானாவின் தலைநகரான கபோரோனுக்கு வடக்கே சுமார் 500 கிமீ (300 மைல்) தொலைவில் உள்ள கரோவ் சுரங்கத்தில் இந்த இரண்டாவது வைரம் கண்டுபிடிக்கப்பட்டது.

தெற்கு ஆப்பிரிக்காவில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட வைரங்களில் மிகப்பெரிய வைரம் இது என்று போட்ஸ்வானா அரசாங்கம் கூறியுள்ளது.

போட்ஸ்வானாவில் இதற்கு முன் மிகப்பெரிய கண்டுபிடிப்பு 2019 இல் இதே சுரங்கத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 1,758 காரட் வைரக் கல் ஆகும்.

போட்ஸ்வானா உலகின் மிகப்பெரிய வைர உற்பத்தியாளர்களில் ஒன்றாகும். இது உலகளாவிய உற்பத்தியில் 20% பங்கை கொண்டுள்ளது. கரோவில் உள்ள சுரங்கத்தின் 100% உரிமையை Lucara கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.