ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மாநாடு: பிரம்மாண்ட ஏற்பாடு

0
41

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மாநாடு நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இந்த மாநாடு புறக்கோட்டை சிறிகொத்தவிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் பிற்பகல் 02 மணிக்கு நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுயாதீன வேட்பாளராக போட்டியிடும் நிலையில் அதற்கான அங்கீகாரமும் இந்த மாநாட்டில் வழங்கப்படவுள்ளது.

ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க தலைமையில், பிரமாண்டமான முறையில் இந்த மாநாடு இடம்பெறவுள்ளதாக கட்சியின் தலைமையகம் அறிவித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள உள்ளனர்.