சுவிஸ் வீதியில் வாக்கிங் செல்லும் முகேஷ் அம்பானி மற்றும் நீட்டா அம்பானி! வைரல் வீடியோ

0
47

சுவிட்ஸர்லாந்தில் இந்தியாவின் முன்னணி கோடீஸ்வரான முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீட்டா அம்பானி வாக்கிங் சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. குறித்த கானொளியில் நீட்டா அம்பானி சிவப்பு நிற ஆடையிலும், முகேஷ் அம்பானி ஃபார்மல் சூட் அணிந்து காணப்படுகின்றனர்.

பாதுகாப்பு குழுவினர் யாரும் இன்றி இருவர் மட்டும் தெருவில் நடந்து செல்வதை வீடியோவில் பார்க்க முடிகிறது. அம்பானி குடும்பத்தினர் சுவிஸில் விடுமுறையை கொண்டாடும் சம்பவங்கள் ஏற்கனவே இடம்பெற்றுள்ளன.

மேலும் விடுமுறை காலத்தில் அவர்கள் அங்குள்ள ஒபுலன்ட் பர்கென்ஸ்டாக் ரிசார்டில் தங்குவர். சுவிஸில் விலை உயர்ந்த தங்கும் விடுதி இது ஆகும். 

இந்த தங்கும் விடுதியில் ஒரு இரவுக்கு அதிகபட்சம் ரூ. 62 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில் 4 ஹோட்டல்கள், இரண்டு ஸ்பாக்கள், 10 உணவகங்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.instagram.com/reel/C_AR_ddIEq7/?utm_source=ig_web_copy_link