அழுதுகொண்டே சாப்பிடும் விலங்கு எது தெரியுமா?: ஆபத்தான உயிரினம் இது

0
65

மனிதர்களுக்கும் சரி விலங்குகளுக்கும் சரி உணவு உண்ணும்போது ஒருவித சந்தோஷம் ஏற்படுமல்லவா? ஆனால் சாப்பிடும்போது ஒரு விலங்கு மட்டும் அழுமாம். அது எந்த விலங்கு என்றால் முதலை.

தான் இன்னொரு உயிரினத்தை உணவாகக் கொள்கிறோமே என்ற கவலையில் எல்லாம் அழுவதில்லை. 2006ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு பரிசோதனையில் முதலைகள் உண்ணும்போது கண்ணீர் விடுவதற்கான அறிவியல் காரணத்தை கண்டுபிடித்துள்ளனர்.

அதாவது, ஒரு முதலை உணவை மெல்லும்போது அதன் தாடைகளின் இயக்கமானது சைனஸில் காற்றைத் தள்ளுகிறது. இதன் காரணமாக முதலையின் கண்களிலுள்ள லொக்ரிமல் சுரப்பியில் ஒருவித எரிச்சல் உண்டாகும். அப்போது கண்ணீர் வருகிறது.

இது முதலைக் கண்ணீர் நோய்க்குறி எனப்படுகிறது. எனவே ஒவ்வொரு முறை உணவு உண்ணும்போதும் முதலை கண்ணீர் வடிக்கிறது.