விஜய்யின் கட்சி கொடியில் இருக்கும் வாகை மலரில் இவ்வளவு சிறப்பு இருக்கா: தமிழர்களின் அடையாளம்

0
113

தமிழக வெற்றி கழகத்தின் கொடியை அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று அறிமுகம் செய்து வைத்தார். பனையூரில் த.வெ.க தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விழாவில் விஜய் கட்சி கொடியை அறிமுகம் செய்தார். அடர்சிவப்பு, மஞ்சள் நிற பின்னணியில் 2 போர் யானைகள் வாகை மலர் ஆகியவை அக்கட்சி கொடியில் இடம்பெற்றுள்ளது.

சரி, வாகை மலர் சிறப்புகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

இதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம். தமிழர்களின் ஐந்திணைகளில் ஒன்றான பாலை நிலத்தில் வளரும் முக்கிய மரம் தான் வாகை மரம். வாகை மலரை தொடத்து கழுத்திலும், காதிலும் அணிகளாக அணிந்து கொள்வதாக சங்க நூல்கள் தெரிவிக்கின்றன.

சங்ககாலத்தில் போரில் வெற்றி பெறும் வீரர்களுக்கு வாகை மலர் சூட்டப்பட்டு வெற்றியை கொண்டாடியதாக தமிழ் இலக்கியங்களில் குறிப்புகள் உள்ளன.

வெற்றி வாகை சூடினான் என்ற சொற்றொடர் இன்றும் புழக்கத்தில் உள்ளது. வாகை மரத்தின் இலை, பூ, பிசின், பட்டை, வேர், விதை என அனைத்தும் மருத்துவ குணங்கள் கொண்டது.

சித்த மருத்துவத்தில் வாகைப்பூ, மரத்தின் வேர், இலை ஆகியவை பஞ்ச மூலிகைகளில் ஒன்றாக பயன்படுகிறது. கண் சார்ந்த நோய்கள், அழற்சி நோய்கள், நுரையீரல் சார்ந்த நோய்களுக்கு வாகைப் பூ மற்றும் அதன் இலை பயன்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.