மாஸ் காட்டிய நாய்கள்: தலைதெறிக்க ஓடிய சிங்கங்கள்

0
56

சிங்கம் – நாய் இரண்டில் எது பலசாலியான மிருகம் என்று கேட்டால் சட்டென சிங்கம் என்றுதான் கூறுவோம் இல்லையா. ஆனால், அண்மையில் வெளியாகியுள்ள ஒரு வீடியோ இல்லை…இல்லை மனதால் பலவீனமானவர்களும் பலசாலிகளே என்று நிரூபித்துள்ளது.

இந்தியாவில் குஜராத் மாநிலம், அம்ரேலி மாவட்டம், சவர்குண்ட்லா, தோரடி கிராமத்திலுள்ள மாட்டுத் தொழுவமொன்றில் இரண்டு நாய்கள் காவல் காத்துக் கொண்டிருந்தன.

அப்பொழுது திடீரென சிங்கமொன்று தொழுவத்தின் வாயிலை நெருங்க, மறுபுறத்திலிருந்த நாய்களைக் கண்டதும் திடுக்கிடுகிறது. சிறிது நேரத்தில் இன்னொரு சிங்கமும் அங்கு வர அது ஆக்ரோஷமாக வாயிலை பிடித்து இழுக்கிறது.

இதற்கு கொஞ்சம் கூட பயப்படாத நாய்கள், சிங்கங்களைப் பார்த்து குரைத்தன. இறுதியில் சிங்கங்கள் நாய்களைப் பார்த்து பயந்து ஓட்டம் பிடித்தன.