2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்ட ஏ.முகமது இல்யாஸ் தனது 78ஆவது வயதில் காலமானார். திடீர் சுகவீனம் காரணமாக புத்தளம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (22) இரவு காலமானார்.
இவர் இதற்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் அரசாங்கத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்திருந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் திடீரென சுகவீனம் அடைந்த அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
எனினும், நேற்று (22) இரவு மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக புத்தளம் வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.