அன்றைக்கு புலிகள் இயக்கத் தலைவரை அவன் இவன் என்று ஒருமையில் விளித்துப் பேசினார். ‘நாட்டை நாசமாக்கியவர்களில் பிரபாகரன் மட்டும்தான் இந்த தேர்தலில் வாக்கு கேட்கவில்லை.
பிரபாகரன் உயிரோடு இருந்திருந்தால் ரணில் அவனையும் கூட்டிக்கொண்டு தேர்தல் செயற்பாடுகளில் ஈடுபடுவார்‘ என தேர்தல் பிரச்சார மேடையில் சுஜீவ சேனசிங்க பேசியிருந்தார்.
இன்று கொழும்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய சுஜீவ சேனசிங்க,
அனுரகுமார சொகுசு வாகனங்களை பயன்படுத்துவதாகவும் பின்பக்கத்தை வைத்துக் கொண்டுவர சொகுசு வாகனங்கள் எதற்கென்று அனுரகுமாரவே முன்னர் ஒருகாலத்தில் கேட்டதாகவும் கூறினார்.
அனுரகுமார சொன்னது அரச வாகனங்களை பயன்படுத்த வேண்டாம் என்பது இப்போது அரசாங்க வாகனங்களை பயன்படுத்தாமல் தனிப்பட்ட வாகனங்களை அனுர பயன்படுத்தலாம் அல்லவா? அனுரகுமாரவை ஏசுவதாக நினைத்து அவரின் வாக்குகளை சுஜீவ சேனசிங்க கூட்டிக்கொண்டிருக்கிறார். எல்லா தலைவர்களுக்கு சூனியம் வைப்பது சுற்றி இருப்பவர்கள்தான் என்பது இதில் இருந்தே தெரியவருகின்றது.