வவுனியா வைத்தியசாலையில் உயிரிழந்த குழந்தையின் உடலை பார்வையிட்ட நீதிபதி!

0
68

வவுனியா மாவட்ட பொது வைத்தியாசலையில் பிறந்து உயிரிழந்த ஈச்சிளம் குழந்தையின் உடலை மாவட்ட நீதிபதி பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த குழந்தையின் மரணம் வைத்தியர்களின் அசமந்தத்தால் ஏற்பட்டதாக சிசுவின் தந்தை வவுனியா பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

இதனையடுத்து இன்று மாலை வவுனியா வைத்தியசாலைக்கு வருகை தந்த நீதிபதி குழந்தையின் சடலத்தை பார்வையிட்டதுடன், தந்தையிடம் இது தொடர்பான வாக்குமூலங்களை பெற்றுள்ளதுடன் விசாரணைகளையும் மேற்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.