ரணிலை ஆதரிப்பவர்களின் எதிர்கால அரசியல் பயணம் நிச்சயமற்றதா?: சிங்கள நாளிதழ் கூறும் விளக்கம்

0
46

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மூலம் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள தினேஷ் குணவர்தன உள்ளிட்ட மொட்டுக் கட்சி எனப்படும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்களின் எதிர்கால அரசியல் பயணம் மேலும் நிச்சயமற்ற நிலையில் இருப்பதாக கொழும்பிலிருந்து வெளியாகும் “தினமின” சிங்கள நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

நேற்று (21) வெளியான பத்திரிகையில் குறித்த நிச்சயமற்ற நிலை தொடர்பில் பிரதான செய்தியொன்று வெளியாகியிருந்தது.

“ஜனாதிபதியை ஆதரிக்கும் மொட்டுக் கட்சி உறுப்பினர்களுடன் புதிய கட்சி” என்பதே அதன் தலைப்பாக காணப்பட்டது. ஒரு துணைத் தலைப்பில், “தேர்தலுக்கு புதிய கட்சியில் இருந்து வேட்பாளர்களை நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய கட்சியின் தலைவராக தினேஷ் குணவர்தனவும் செயலாளராக ரமேஷ் பத்திரனவும் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த சுமார் 100 உறுப்பினர்கள் இந்த புதிய கட்சியில் இணைந்துள்ளதுடன், ஜனாதிபதித் தேர்தலின் பின் இடம்பெறும் எந்தவொரு தேர்தலுக்கும் அந்தக் கட்சியில் இருந்து வேட்பாளர்களை முன்வைக்கப்படும் என “தினமிண” வெளியிட்டுள்ள செய்தி தெரிவிக்கின்றது.

எவ்வாறாயினும், ஐக்கிய தேசியக் கட்சி பொதுத் தேர்தலில் வேட்புமனுக்களை வழங்காது என ரணில் விக்கிரமசிங்க அறிவித்ததையடுத்தே தினேஷ் குணவர்தன உள்ளிட்ட ரணில் தரப்பின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்கள் இந்த அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.