கொழும்பு நகரில் அமைந்துள்ள பிரபல உணவுகமொன்றுக்கு எதிராக மேலாடையின்றி தோசை சுட்டு கொண்டு இருந்ததாகக் கூறி வழக்கு தொடரப்பட்டுள்ளது. பொதுச் சுகாதார பரிசோதகரால் நேற்று (21) கொழும்பு நீதவான் நீதிமன்றில் 02 வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது .
அத்துடன் ராஜகிரிய மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பல குற்றச்சாட்டுகளின் கீழ் 06 கடைகளுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொது சுகாதார பரிசோதகர் ஏ. எல். எம். சந்திரசேன கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு தாக்கல் செய்திருந்தார்.