இலங்கையில் எதிர்வரும் செப்டம்பர் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக, ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, நாமல் ராஜபக்ச, அநுரகுமர திசாநாயக்க, உள்ளிட்ட பலர் போட்டியவுள்ளதாக கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு சின்னங்களை வழங்கியுள்ளது, இதில் ரணிலுக்கு எரிவாயு சிலிண்டர் சின்னத்தை வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகத்தில் யானை சின்னத்தை மறைந்து எரிவாயு சிலண்டர் சின்னம் கொண்ட பாதகையை கட்சி உறுப்பினர்கள் காட்சிப்படுத்தியுள்ளனர்.
இதனால் கோபமடைந்த ரணில் உடனடியாக படத்தை அகற்றுமாறு கட்சி உறுப்பினர்களுக்கு தொலைப்பேசி அழைப்பில் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை முகநூலில் ஜீவன் பிரசாத் என்பவர் பதிவிட்டுள்ளார்.