குத்துசண்டை போட்டியில் தமிழ் மாணவன் சாதனை: குவியும் பாராட்டுக்கள்

0
62

வட மாகாண ரீதியில் குத்துசண்டை போட்டியில் முதலாம் இடத்தை பெற்று மடு கல்வி வலய மாணவன் சாதனை படைத்துள்ளார்.
வடக்கு மாகாண பாடசாலை ரீதியாக 20 வயது பிரிவில் குத்துசண்டை போட்டியில் பங்கு பற்றிய பெரிய பண்டிவிரிச்சான் மகா வித்தியாலய மாணவன் விஜிதன் கபிலன் முதலாம் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளார்.

கடந்த 17 மற்றும் 18ம் திகதி முல்லைத்தீவில் நடந்த போட்டியில் குறித்த மாணவன் பங்கு பற்றி முதலாம் இடத்தை பெற்று சாதித்துள்ளார். தற்போது மாகாண மட்ட பாடசாலை ரீதியாக மெய்வல்லுநர் போட்டிகள் இடம்பெற்ற வருகின்றமை குறிப்பிடத்தக்கது.