ஈஸ்டர் தாக்குதல் – நஷ்ட ஈட்டுத் தொகையை முழுவதுமாக செலுத்திய மைத்திரி

0
65

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு செலுத்த வேண்டி மொத்த நட்ட ஈட்டுத்தொகையையும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செலுத்தியுள்ளார்.

இறுதியாக மீதமிருந்த 12 மில்லியன் ரூபாவை கடந்த 16ஆம் திகதி செலுத்தியுள்ளதாக மைத்திரிபால சிறிசேனவின் சட்ட ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைய, மொத்தமாக 100 மில்லியன் ரூபாவை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செலுத்தியுள்ளார்.