நாகசைதன்யா 2027-ல் 2-வது மனைவியை விவாகரத்து செய்வார்; சர்ச்சை ஏற்படுத்திய ஜோதிடர்: தெலுங்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்

0
62

நடிகர் நாகசைதன்யா சோபிதா துலிபாலா ஜாதகத்தை கணித்து பகிரங்கமாக வெளியிட்ட பிரபல ஜோதிடரை தெலுங்கு மகளிர் ஆணையம் விசாரணைக்கு நேரில் வரவேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பிரபல ஜோதிடர் ஒருவர் நாகசைதன்யா சோபிதா துலிபாலா ஜாதகத்தை பரிசீலித்ததாகவும் பொருத்தம் சரியில்லை என்றும் இருவரும் 2027-ல் பிரிந்து விடுவார்கள் என்றும் அவர்களின் பிரிவுக்கு ஒரு பெண் காரணமாக இருப்பார் என்றும் கருத்து தெரிவித்து இருந்தார்.

இந்த தகவல் வலைத்தளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. ஜோதிடர் கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்புகளும் கிளம்பின. இந்நிலையில், தெலுங்கு சினிமா சங்கங்கள் சார்பில் மகளிர் ஆணையத்தில் ஜோதிடர் மீது புகார் செய்யப்பட்டது.

கேட்காமலே மற்றவர்கள் வாழ்க்கையில் புகுந்து ஜாதகம் பார்த்து பகிரங்கமாக வெளியிடுவது தவறு என்றும் எச்சரித்துள்ளனர். இதையடுத்து தெலுங்கு மகளிர் ஆணையம் ஜோதிடருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளதுடன், வருகிற 22-ம் திகதி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று நோட்டீசில் அறிவித்துள்ளது.