வேட்பு மனுவில் கையொப்பமிட்ட ஜனாதிபதி: 16 ஆம் திகதி முதல் பிரச்சாரம்

0
53

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் கையொப்பமிட்டார். கையொப்பமிடும் நிகழ்வு கொழும்பு பிளவர் வீதியிலுள்ள அவரது அரசியல் அலுவலகத்தில் இடம்பெற்றது.

ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீன வேட்பாளராக போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பரந்தப்பட்ட கூட்டணியொன்றை அமைத்து வருகிறார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 92 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு ஆதரவளித்துள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு அண்மையில் அறிவித்திருந்தது. ஆனால் எத்தனை பேர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவென உறுதியான தரவுகள் எதுவும் வெளிப்படுத்தப்படவில்லை.

இந்நிலையில் 16ஆம் திகதி வெளிப்படுத்தப்பட உள்ள கூட்டணி தொடர்பான அறிவிப்பின் போதே ரணில் விக்ரமசிங்கவுக்கு பொதுஜன பெரமுனவின் எத்தனை எம்.பிகள் ஆதரவளிக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்த முடியும்.