மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரியான மார்க் ஜூக்கர்பெர்க், கடந்த 2012ஆம் ஆண்டு பிரிஸில்லா சானைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் மார்க் அவரது வீட்டின் பின்புறத்திலுள்ள தோட்டத்தில் அவரது மனைவி பிரிஸில்லாவுக்காக சிலையொன்றை நிறுவியுள்ளார்.
இந்த சிலையுடன் பிரிஸில்லா நிற்கும் புகைப்படத்தை மார்க் அவரது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நியூயோர்க்கைச் சேர்ந்த டேனியல் அர்ஷம் என்பவரால் இந்தச் சிலை உருவாக்கப்பட்டுள்ளது.