2036 ஒலிம்பிக் இந்தியாவில்: மோடி உறுதிபடுத்தினார்

0
144

2036ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இந்தியா கனவு காண்கிறது என்றும், அதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவின் சுதந்திர் தினத்தை முன்னிட்டு ஆற்றிய விசேட உரையின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய பிரதமர் மோடி, பாரிஸ் ஒலிம்பிக் 2024 இல் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய அனைத்து விளையாட்டு வீரர்களையும் வாழ்த்தினார். மேலும் பாராலிம்பிக்ஸுக்கு பயணிப்பவர்களுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

ஜி20 உச்சி மாநாடு போன்ற பெரிய நிகழ்வை நடத்துவதற்கான உள்கட்டமைப்பு இந்தியாவிடம் உள்ளது என்பதை ஏற்கனவே நிரூபித்துள்ளதாகவும், 2036இல் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதே நாட்டின் அடுத்த கனவு என்றும் அவர் கூறினார்.

டோக்கியோ பாராலிம்பிக்ஸில் 19 பதக்கங்களையும், பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 111 பதக்கங்களையும் வென்ற வரலாற்றுச் சிறப்பு இந்தியாவை சாரும்.

எதிர்வரும் 28ஆம் திகதி தொடங்கும் பாரிஸ் பாராலிம்பிக்ஸிற்காக இந்தியா 84 தடகள வீரர்களை அனுப்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.