நட்சத்திர தம்பதிகளான நாகர்ஜூனா – அமலா தம்பதியின் மகன் நாக சைத்தன்யா, பிரபல நடிகை சமந்தாவை திருமணம் செய்திருந்ததும் இறுதியில் இருவரும் விவாகரத்து பெற்றதும் அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில், அண்மையில் நாக சைத்தன்யா அவரது புது காதலியான நடிகை சோபிதா துளிபாலாவை நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். நிச்சயதார்த்தம் முடிந்த பின்னர் அவர்கள் குடும்பமாக இருக்கும் புகைப்படங்களும் பிரபலமானது.
இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்னர் நடிகர் நாகர்ஜூனா அவரது புதிய மருமகளான சோபிதா குறித்து ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்த கருத்து தற்போது பெரும் பேசுபொருளாகியுள்ளது.
அதாவது,“சோபிதா ஹொட்டாக இருக்கிறார். அவரிடம் ஏதோ ஒன்று நம்மை ஈர்க்கிறது” எனப் பேசியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.