செப்டம்பர் 22ஆம் தேதி நாடாளுமன்றம் கலைக்கப்படும்: அனைத்து ஏற்பாடுகளும் தயார்

0
42

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி காலை நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு சகல ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

“தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் உறுதியாக வெற்றிபெறுவார். அவர் ஜனாதிபதியாக தெரிவானதும் முதல் பணியாக நாடாளுமன்றம் மறுநாள் கலைக்கப்படும்.

ஊழல்வாதிகள், திருடர்கள், குண்டர்கள் நிறைந்த நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு புதிய நாடாளுமன்ற பிரதிநிதிகளை உருவாக்கும் சந்தர்ப்பம் மக்களுக்கு வழங்கப்படும்.” எனவும் அவர் தேசிய சக்தி ஏற்பாடு செய்திருந்த பொதுக் கூட்டமொன்றில் உரையாற்றும் போது கூறியுள்ளார்.