பரீட்சை வினாத்தாளில் வைத்தியர் அர்ச்சுனா; மாணவர்கள் குழப்பம்

0
65

மாகாண கல்வித் திணைக்களத்திற்கு உட்பட்ட வலயம் ஒன்றில் பாடசாலையில் இடம்பெற்ற பரீட்சையில் சாவகச்சேரி முன்னாள் வைத்திய அட்சகர் அருச்சுனா தொடர்பில் வந்த கேள்வி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடியியல் பாடத்தில் கேட்கப்பட்ட கேள்விகள் ஒன்றிலேயே இவ்வாறு மருத்துவர் அருச்சுனா பெயரில் கேள்வி இருந்துள்ளது.

அதாவது மாணவர்களிடம் கொடுக்கப்பட்ட அந்த பரீட்சை தாளில், டாக்டர் ஒளிப்பு மறைப்பு இன்றி மனதில் பட்டதை கூறினார். இங்கு ஒளிப்பு மறைப்பு என்ற இணைமொழி தரும் பொருள் என்ன என்பதே அந்த வினா ஆகும்.  

இந்நிலையில் குறித்த வினாத்தாள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது. யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதாரவைத்தியசாலை தொடர்பில் எழுந்த சர்ச்சையால் மருத்துவர் அருச்சுனா இலங்கையில் மட்டுமன்றி வெளிநாடு வாழ்  தமிழர்கள் மத்தியிலும் பிரபல்யம் அடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.