ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து ரணில் விக்கரமசிங்க மூலம் நிதி அமைச்சராக சுமார் 200 புதிய மதுபான அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு கிடைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் 12ஆம் திகதி திங்கட்கிழமை ‘இலங்கை மதுபான உரிமையாளர்களின் சங்கம்’ மூலம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன.
அச் சங்கத்தின் உபதலைவர் பிரசன்ன விதானகே உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு, மதுவரித் திணைக்களத்தின் தலைவர் குறித்த அனுமதிப்பத்திரங்களை வெளியிட்டுள்ளதாக முறைப்பாடு வழங்கியுள்ளனர். முறைப்பாடு வழங்கியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த உபதலைவர் பிரசன்ன விதானகே,
”இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி மற்றும் நிதி அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க கட்டுப் பணம் செலுத்தியுள்ள ஒரு சந்தர்ப்பத்தில் அவருக்கு கீழ் இயங்கும் மதுவரித் திணைக்களம் புதிய 200 அனுமதிப் பத்திரங்களை வழங்கியுள்ளமை தேர்தலை பாதிக்கும் காரணி“ எனத் தெரிவித்தார்.
இது தொடர்பில் ஆராய்ந்த பின்னர் குறித்த சட்ட விரோத நடவடிக்கையை நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு முறைப்பாடு வழங்கியுள்ளனர்.