இந்தியா, உத்தரப்பிரதேசம் கோரக்பூரைச் சேர்ந்த ராஜ்கிர் மிஸ்திரி எனும் 46 வயதான நபரொருவர் கடந்த ஒரு வாரமாக கடுமையான வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
சிகிச்சை பெறுவதற்காக மருத்துவமனைக்கு சென்றவரின் வயிற்றை பரிசோதித்து (Scan) செய்து பார்த்தபோது அவரது அடிவயிற்று சதை, உள்ளுறுப்புக்களுடன் இணைந்து காணப்பட்டுள்ளது.
இதனால் அவருக்கு குடலிறக்கத்துக்கான ஹெர்னியா அறுவை சிகிச்சை (Hernia Operation) செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
அறுவை சிகிச்சையின்போது, ராஜ்கிர்ரின் அடிவயிற்றிலுள்ள சதைப் பகுதி பெண்களுக்கு இருக்கும் கருப்பை (Uterus) என்பது தெரிய வந்துள்ளது. சரியாக வளர்ச்சியடையாத அந்தக் கருப்பையுடன் கரு முட்டையை உருவாக்கும் கருவகம் (Ovary) இருந்துள்ளது.
ஆனால், ராஜ்கிர்ரின் உடலில் பெண் தன்மைக்கான எந்தவொரு அறிகுறியும் காணப்படாத நிலையில் இந்த அரிதினும் அரிதான வளர்ச்சியைக் கண்டு மருத்துவர்கள் வியப்படைந்துள்ளனர்.
இந்நிலையில் ராஜ்கிர்ரின் அடிவயிற்றிலிருந்த கருவகம் மற்றும் கருப்பையை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியதோடு ராஜ்கிர் நலமாக உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.