மூன்றாவது முறையாக பாரிய விருதை வெல்லும் இலங்கை மகளிர் கிரிக்கெட் வீரங்கனை!

0
51

ஜூலை மாதத்திற்கான ஐசிசி வீராங்கனையாக இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி சமரி அத்தபத்து தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.

மேலும், இந்திய வீராங்கனைகளான ஸ்மித்ரி மந்தனா மற்றும் ஷபாலி வர்மாவிடமிருந்து கடும் போட்டி நிலவியதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த மாதம் இலங்கை மகளிர் அணி ஆசியக் கிண்ணத்தை முதன் முறையாக வென்றதுடன் அதற்கு சமரி அத்தபத்து பெரும் பங்களிப்பை வழங்கியிருந்தார். 34 வயதான சமரி அத்தபத்து இந்த விருதை வெல்வது இது மூன்றாவது முறையாகும்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் ஹெய்லி மேத்யூஸ் மூன்று முறையும், அவுஸ்திரேலியாவின் ஆஷ்லே கார்ட்னர் 4 முறையும் விருதை வென்றுள்ளனர்.