ரணிலின் பின்னால் அனைவரையும் ஒன்றிணையுமாறு பிள்ளையான் அழைப்பு

0
63

இந்த நாட்டினை மீட்டெடுத்து சிறந்த கட்டமைப்புடன் கொண்டு செல்லும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) பின்னால் அனைவரையும் ஒன்றிணையுமாறு கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன்(Sivanesadurai Chandra Kandan) வேண்கோள் விடுத்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் மட்டக்களப்பில் நேற்று (12.08.2024) தேர்தல் அலுவலகம் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த அலுவலகத்தை, மட்டக்களப்பு(Batticaloa) நகரில் மட்டக்களப்பு – திருகோணமலை (Trincomalee) பிரதான வீதியில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி போன்ற கட்சிகள் இணைந்து திறந்து வைத்துள்ளன.

Gallery

இந்த நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியானது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் வகையில் இந்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளதுடன் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஏனைய ஆதரவு வழங்கும் கட்சிகளை ஒருங்கிணைத்து கொண்டு செல்லும் அலுவலகமாகவும் இது செயற்படவுள்ளதாக இங்கு அறிவிக்கப்பட்டது.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயலாளர் பூ. பிரசாந்தன், ஐக்கிய தேசிய கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் சுதர்சன், ஐக்கிய தேசிய கட்சியின் மாவட்ட மகளிர் இணைப்பாளளர் சசிகலா ஜெயதேவா உட்பட கட்சி முக்கியஸ்தர்கள் என பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.