பரஸ்பர மரியாதை, புரிதலுக்கு மன்னர் சார்லஸ் அழைப்பு: ஆயிரக்கணக்கான பொலிஸ் அதிகாரிகள் பணியமர்வு

0
55

பிரித்தானியாவில் முஸ்லீம்கள் மற்றும் புலம்பெயர்ந்தோரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களின் பின்னர் பரஸ்பர மரியாதை மற்றும் புரிதலுக்கு மன்னர் சார்லஸ் அழைப்பு விடுத்தார்.

அமைதியை மீட்டெடுப்பதற்கான அவர்களின் முயற்சிகளுக்கு பொலிஸ் மற்றும் அவசரகால சேவைகளுக்கு மன்னர் நன்றி தெரிவித்தார்.

மேலும் சிலரின் ஆக்கிரமிப்பு மற்றும் குற்றச்செயல்களை சமூக குழுக்கள் எதிர்கொண்ட விதம் குறித்தும் மன்னர் பாராட்டினார். கடந்த மாதம் 29 ஆம் திகதி பிரித்தானியாவில் இடம்பெற்ற கத்திக்குத் தாக்குதலின் போது சிறுமிகள் மூவர் உயிரிழந்தனர்.

தாக்குதல் மேற்கொண்ட சந்தேக நபர் முஸ்லீம் என்றும் புலம்பெயர்ந்தவர் என்றும் வெளியான கருத்துத்தை தொடர்ந்து வன்முறை வெடித்தது.

பிரித்தானியா மற்றுமொரு பாரியளவிலான போராட்டத்திற்கு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகின. தீவிர வலதுசாரி இனக் கலவரங்கள், பல நகரங்களில் திட்டமிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்களும் செய்தி வௌியிட்டிருந்தன.

சுமார் 30 இடங்களை இலக்குவைக்க கூடும் என தீவிர வலதுசாரி தகவல் தொடர்புகளை கண்காணிக்கும் ஆர்வலர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் ஆயிரக்கணக்கான விசேட பொலிஸ் அதிகாரிகள் இந்த வார இறுதியில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.