பிரதமர் பதவியை தனக்கு இல்லாமல் செய்த மொட்டுக் குழு! விஜயதாச வெளிபடுத்திய தகவல்

0
43

இலங்கையில் இடம்பெற்ற பாரிய போராட்டத்தின் போது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தன்னை பிரதமர் பதவியை ஏற்குமாறு கோரிக்கை விடுத்ததாக முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எனினும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஒரு குழு அந்த வாய்ப்பை தனக்கு இல்லாமல் செய்ததாக விஜயதாச குறிப்பிட்டுள்ளார். அனுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“இலங்கையில் போராட்டம் நடந்தபோது, ​​நாட்டை அமைதிப்படுத்தி, நாட்டை கட்டியெழுப்புவதற்காக, அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய  2022 மே மாதம் 12 திகதி ஒரு தீர்மானத்தை எடுத்து, அரசாங்கத்தின் பிரதமர் பதவியை ஏற்குமாறு எனக்கு அறிவித்தார்.

அதனை அறிந்த பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் குழப்பமடைந்து ரணில் விக்கிரமசிங்கவை அவசரமாக அழைத்து வந்து ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்ததால் அவருக்கு பதவி வழங்கப்பட்டது என்றார்.