உலகில் உள்ள கப்பல்கள் நங்கூரமிடுவதற்காக மட்டும் உருவாக்கப்படவில்லை என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச(Namal rajapaksa) தெரிவித்துள்ளார். அவர் தனது முகநூல் கணக்கில் இட்டுள்ள பதிவில் இதனைத் தெரிவித்துள்ளார்.
சவாலை ஏற்று ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியதாக குறிப்பிட்ட அவர் “துறைமுகத்தில் நங்கூரங்கள் வைக்கப்படும் வரை கப்பல் பாதுகாப்பாக இருக்கும்.” என தெரிவித்தார்.
இந்த யுத்தத்தை வெற்றியுடன் முடித்துக் கொள்வதாகவும், சிறிலங்கா பொதுஜன பெரமுன தன்மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி
சிறிலங்கா பொதுஜன பெரமுன 2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளரை அறிவிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு நேற்று(07) கட்சியின் தலைமையக வளாகத்தில் நடைபெற்றது. இதன்போது வந்து என்னை வாழ்த்திய அனைவருக்கும் என் இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி எனவும் அவர்தனது பதிவில் தெரிவித்துள்ளார்.