நாடு விழுந்த போதெல்லாம் நாட்டை காப்பாற்றியவர் ரணில்: புகழாரம் சூடும் பிரதி தலைவர்

0
62

வரலாற்றில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த ஒவ்வொரு தருணத்திலும் ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) அச்சமின்றி ஆட்சியைக் கைப்பற்றியதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜயவர்தன(Ruwan Wijewardena) தெரிவித்தார். இவ்வாறு நாட்டைக் கைப்பற்றியதாகவும், ஒவ்வொரு நிலையிலும் நாட்டைக் காப்பாற்றியதாகவும் விஜயவர்தன தெரிவித்தார்.

நிலையான நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ரணில் விக்ரமசிங்கவுடன் கைகோர்க்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுப்பதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் தெரிவித்தார்.

ஒன்றிணைவோம் வெற்றிபெறுவோம் என்ற தொனிப்பொருளில் (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே பிரதித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பம்பலப்பிட்டி லோரிஸ் மாவத்தையில் அமைந்துள்ள ரணில் விக்ரமசிங்கவின் ஜனாதிபதி தேர்தல் ஊடக மையத்தில் இந்த ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது.